பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பது இவர் தான்... ரசிகரின் கேள்வியால் கடுப்பான சாண்டியின் மனைவி கூறியதை பாருங்க..!


பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியின் நடிகை, நடிகர்கள், தொகுப்பாளர்கள் என பெரும்பாலோனோர் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று சென்றுள்ளனர்.

கடைசி வாரம், என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவார்ஷ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் இருக்கிறது.

இந்நிலையில், பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது.

இதற்கிடையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டி பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில், முகேனின் ரசிகர் ஒருவர் அதில் , சாண்டிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார் சாண்டி மனைவியின் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், .பட்டத்தை வெல்ல முகென் தான் தகுதியுடையவர். அவர் பன்முக திறமை கொண்ட நபர். எனவே, அவர் தான் இந்த சீசனில் வெற்றி பெற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டியின் மனைவி, உங்களுக்கு முகெனை பிடிக்கும் என்றால் ஆதரவளியுங்கள். அதற்காக அடுத்தவர்களை குறைத்து கூற வேண்டாம். உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு நீங்கள் ஆதரவு அளியுங்கள் என்று கூறியுள்ளார் .

SHARE

Related Posts

Previous
Next Post »