மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் தவிர்க்க முடியாத ஒரு தெய்வீகப் பொருளாக சங்கு இருக்கிறது.


பிறந்த குழந்தைக்கு பாலூட்டும் சடங்கு செய்யும் போது வலம்புரி சங்கில் பால் ஊற்றி குழந்தைகளுக்கு ஊட்டுவதால் தெய்வங்களின் அருளாசிகள் அக்குழந்தைக்கு கிடைக்கிறது என நம்பப்படுகின்றது.

பல அற்புதமான தன்மைகளை பெற்றிருக்கும் சங்கில் ஒரு வகையான வலம்புரி சங்கு கொண்டு செய்யதால் வீட்டில் செல்வ சேர்க்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பாரப்போம்.

பரிகாரம்

உங்களிடம் இருக்கின்ற சிறிய அளவிலான வலம்புரிசங்கை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமான நீரை நிரப்பி வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.

அந்த சங்கை இடக்கரத்தில் வைத்துக்கொண்டு, உங்கள் வலது கரத்தை அந்த சங்கின் மீது வைத்து மூடி கண்களை மூடி கொள்ளுங்கள்.

பின்னர் “ஓம் சுதர்சனாய நமஹ” “ஓம் மஹா விஷ்ணவே நமஹ” என்கிற மந்திரத்தை குறைந்தது 108 முறை 1008 ஒருவரை துதித்து முடித்த பின் அந்த சங்கு தீர்த்தத்தை சிறிது உங்கள் வலது கையில் விட்டு, அந்த நீரை உங்கள் தலையில் தெளித்து, மீண்டும் சிறிது நீரை வலது கையில் விட்டு தீர்த்தமாக அருந்த வேண்டும்.

நன்மைகள்

    இந்த சங்கு பரிகாரத்தை செய்த பிறகு நீங்கள் வெளியில் செல்கின்ற எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமாக முடியும்.
    முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உடல் மற்றும் மனதில் ஆன்மிக பலம் பெருகும். தெய்வீக அருள் அதிகரிக்கும். செல்வங்களின் சேர்க்கை பன்மடங்கு பெருகும்.
    மேலும் தோஷங்கள், திடீரென ஏற்படும் ஆபத்துகள் விலகும்.
    இந்த சங்கு பரிகார முறையில் மிகவும் சிறந்த பலன்களை பெற சங்கு தீர்த்தத்தில் இரண்டு துளசி இலைகளை விட்டு அந்த நீரை அருந்துவது பலன்கள் பன்மடங்கு பெருகச் செய்யும்.

SHARE

Related Posts

Previous
Next Post »