சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டு வெடிப்பு!


சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டு வெடிப்பு!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்றுமுன்னர் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடிப்பை தொடர்ந்து அந்தப்பகுதியில் பாரிய தீப்பரவலொன்றும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

681வது இராணுவ படைப்பிரிவு மற்றும் கடற்படைமுகாம் வளாகத்திற்கும் இடைப்பட்ட முல்லைத்தீவு பிரதான வீதியோரப் பகுதியிலேயே இவ்வாறு பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் 681வது படைப்பிரிவு இராணுவத்தினர் மேலதிக விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE

Related Posts

Previous
Next Post »