வயிற்று வ லியால் துடித்த மகள்… பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!தமிழகத்தில் வயிற்று வ லியால் துடித்த பெண்ணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதால், அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

விருதுநகர் அருகே திருச்சூழி சித்தலக் குண்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கிருக்கும் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் அடைக்கலம் என்பவர் அருகில் இருக்கும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அடைக்கலத்திற்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதால், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து திடீரென்று மாணவிக்கு வயிற்று வ லி ஏற்பட, உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கூற, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர் கேட்ட போதும், மாணவி கூற மறுத்ததால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாணவி 18 வயதிற்கும் கீழ் உள்ளதால், மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடந்துள்ளது. அப்போது மாணவி, அடைக்கலத்துடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து அடைக்கலத்தை பிடித்து பொலிசார் விசாரித்த போது, மாணவியை கர்ப்பமாக்கியதை ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

SHARE

Related Posts

Previous
Next Post »