பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள்!


மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உயிரிழந்த மாணவி செல்வி.நடேஸ்வரராஜன் அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.


காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

அதனையடுத்து சடலம் காரைதீவு மத்திய வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


இதன்போது மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி அக்ஸயா திடிரென எரிந்த நிலையில் தரையில் வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக

SHARE

Related Posts

Previous
Next Post »