வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து திருநாவற்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் 45 வயதுடைய த.பிரகலாதன் எனும் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Related Posts

Previous
Next Post »