வவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் தீவிர தேடுதல்! பீதியில் மக்கள்வவுனியா வைத்தியசாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில், கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று நாளையதினம் ஆளுநரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு முன்னறிவித்தலும் இன்றி பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இடுபட்டதால் மக்கள் பீதியடைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE

Related Posts

Previous
Next Post »