ஈஸ்டர் தாக்குதல் – பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதோடு, இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

SHARE

Related Posts

Previous
Next Post »